maniyosai.com

You are here: Home செய்திகள் சார்க் மாநாட்டில் பங்கேற்க பாக். செல்கிறார் ப.சிதம்பரம்

சார்க் மாநாட்டில் பங்கேற்க பாக். செல்கிறார் ப.சிதம்பரம்

E-mail Print
Share/Save/Bookmark

chidambaramபுதுதில்லி: சார்க் மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்ச ப.சிதம்பரம் வரும் 26ம் தேதி (26.2.10) பாக்கிஸ்தானுக்கு செல்கிறார்.

சிதம்பரத்தின் இந்த 2 நாள் அரசு முறை சுற்றுப் பயணம், இரு நாட்டு உறவில் உள்ள தேக்க நிலையை கலைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாக். தீவிரவாதிகளால் மும்பையில் உள்ள சில தனியார் நட்சத்திர விடுதிகள் தாக்கப் பட்டன.

மும்பை ரயில் நிலையத்திலும் தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் மடிந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாக். அமைதி
பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 26, 27 ஆகிய தேதிகளில் பாக்கிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் நடக்கவிருக்கும் சார்க் மாநாட்டில் கலந்துக் கொள்ள பாக். செல்லவுள்ளார்.

இதனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில்,

”சிதம்பரம், பாக்கிஸ்தான் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்.” என்றார்.

மே 2008ல் பாக்கிஸ்தானுக்கு பிரணாப் முகர்ஜி சென்றிருந்தார். அதன் பிறகு இப்பொழுதுதான் இந்திய அமைச்சர் ஒருவர் பாக்கிஸ்தானுக்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Thursday, 04 February 2010 12:15 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits