பெங்களூரு: அண்மையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார்.
சமீபத்தில், பெல்லாரி காந்திநகரில் 5மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 27 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தையே உலுக்கியது.
இந்நிலையில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறினார் கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டு தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்க வேண்டும்.
இக்கட்டிடத்க்கு அனுமதியளித்த அனைத்து அதிகாரிகள் மீது உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற கட்டிட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்க வேண்டும் . கர்நாடக மாநிலம் முழுவதும் கட்டப்பட்டு வரும் அடுககு மாடி கட்டிடங்கள்
அனைத்திலும் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?


