மும்பை: 1993ம் ஆண்டு நடந்த மும்பை வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக தேடப் பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான், 17 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் பிப்.5 இரவுகைது செய்யப் பட்டுள்ளான்.
ஃபெரோஸை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் பரிசு என காவல் துறையினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் 40 வயதான ஃபெரோஸ் மும்பை போலீஸாரால் கைது செய்யப் பட்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளான்.
சம்பவம் நடந்து சில நாட்களிலேயே ஃபெரோஸ் துபாய் தப்பி ஓடி விட்டான். 17 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 3ம் தேதிதான் மும்பை திரும்பினான்.
மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு தேவையான ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிப் பொருட்களை, இவன் தான், தன் வாகனத்தில் வெடிகுண்டு நடந்த இடத்துக்கு கொண்டு சென்றான் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?


