maniyosai.com

You are here: Home செய்திகள் நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி கோபால்சாமி எழுதியக் கடிதம் வெளியானது.

நவீன் சாவ்லாவை நீக்கக் கோரி கோபால்சாமி எழுதியக் கடிதம் வெளியானது.

E-mail Print
Share/Save/Bookmark

புதுடெல்லி: தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாக் குறித்து குடியரசுத் தலைவருக்கு முன்னாள் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி எழுதிய புகார் கடிதத்தில் எழுதியிருந்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  நவீன் சாவ்லா தேர்தல் கமிஷனராக இருந்தப்போது அவரைப் பணி நீக்கம் செய்யக்கோரி அப்போதைய தலைமைத் தேர்தல் கமிஷனர் கோபால்சாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தை வெளியிட நவீன் சாவ்லா எதிர்ப்பு தெரிவித்ததால் ஜனாதிபதி மாளிகை கடிதத்தை வெளியிட மறுத்துவிட்டது. ஆனால் இப்பொழுது அதை சட்ட அமைச்சகம் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 93 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் நவீன் சாவ்லா நடுநிலையாக இல்லையென்றும், அவர் ஒரு அரசியல் கட்சிக்கு மிகவும் ஆதரவாக செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தான் ஆதரவாக இருப்பது மட்டுமின்றி மற்றொரு தேர்தல் கமிஷனர் குரேஷியையும் அந்தக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட செய்யப் பார்க்கிறார். தேர்தல் கமிஷனராக இருக்கும்போதே நவீன் சாவ்லா தன் குடும்பத்தினருடன் இணைந்து நடத்தும் அறக்கட்டளைக்கு அக்கட்சியிடம் இருந்து நன்கொடையும் பெற்று வருகிறார். இதுக்குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி மற்றும் 179 எம்.பி.,க்களும் தன்னிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் நவீன் சாவ்லாவைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.





Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits