புதுதில்லி: பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மரபணு மாற்றம் செய்யப் படும் கத்திரிக்காய்களை வணிக ரீதியாக பயிரிட அனுமதி அளிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது, “மரபணு மாற்ற கத்திரிக்காயை அனுமதிப்பது குறித்து, துறை விஞ்ஞானிகளிடம் ஒரு தீர்க்கமான கருத்து இல்லை. இது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
பலதரப் பட்ட மக்கள் எதிர்க்கும் மரபணு மாற்ற கத்திரிக்காயை, அவசரக் கோலத்தில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டிய அவசியல் இல்லை. மிக கவனத்துடன் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டியது என் கடமை.
மரபணு மாற்றம் செய்யப் பட்டக் கத்திரிக்காயால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளையுமா என்று அரசு சாரா குழுவால் ஆராய்ச்சி செய்த பின்பே, இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும்.” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
Want to write for Maniyosai?


