புதுடெல்லி: இன்றிலிருந்து (27/02/2010) மூன்று நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியா செல்கிறார். இந்த பயணத்தில் தீவிரவாதம் குறித்த விவாதங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த பயணத்தில் மார்ச் 1 ம்தேதி ஷுரா கவுன்சிலில் (சவுதி நாடாளுமன்றம்) உரையாற்றுகிறார். இது மிக அபூர்வமாக வெளிநாட்டு பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் உயரிய மரியாதை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1982ம் ஆண்டு இந்திரா காந்தி சவுதி அரேபியா சென்றார். அதன் பிறகு 28 ஆண்டுகளாக எந்த இந்திய பிரதமரும் சவுதி செல்லவில்லை. இந்நிலையில் இப்பொழுது பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியா பயணம் செல்கிறார். சவிதி மன்னர் அப்துல்லா 2006ல் இந்தியா வந்ததையடுத்து நாக்கு ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் சவுதி செல்கிறார். இதில் தீவிரவாதிகளை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைப்பது பற்றிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
டெல்லியில் இருக்கும் சவுதி அரேபிய அலுவலுகம் இந்தியர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் வேலைவாய்ப்பு விஷயமாகவும் சவுதி செல்ல ஒராண்டிற்கு 6 லட்சம் பேருக்கு விசா அளிக்கிறது. இதுத் தவிர 1.70 லட்சம் பேருக்கு ஹஜ் புனித யாத்திரை செல்ல விசா அளிக்கிறது.அதனால் இருநாட்டு உறவு மேம்படும் வகையிலும், கல்வி, எரிபொருள் பற்றிய பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன. இதன் காரணமாக தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ஷாஷிரூயா, அசிம் பிரேம்ஜி, டாடா நிறுவன தலைமை அதிகாரி ராமதுரை ஆகியோர் பிரதமருடன் செல்கின்றனர்.
Want to write for Maniyosai?


