டோக்கியோ/ வாஷிங்டன்: சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து எந்நேரத்திலும் சுனாமி தாக்கலாம் என்ற பயத்தில் ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் சிலி நாட்டை உலுக்கியது. இதில் 300 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் சுனாமி பயத்தில் உறைந்துள்ளன.
ஜப்பான் கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளதையடுத்து, கடற்கரையோரம் வாழும் சுமார் 70,000 பேர், பள்ளிகள், அரசு கட்டிடங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளனர்.
ஜப்பான் மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் கடற்கரைக்கு செல்லக் கூடாது என ஜப்பான் பிரதமர் யூகியோ ஹொட்டாயோமோ எச்சரித்துள்ளார்.அரசின் எச்சரிக்கை செய்திகள், ஜப்பான் தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து ஒளிப்பரப்பப் பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
1960ம் ஆண்டு, சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் ஜப்பானில் 160 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையே, அமெரிக்க கடற்கரையோரங்களிலும் சுனாமி தாக்கக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதால், அமெரிக்க மக்களை மிக கவனமாக இருக்கும் படி, அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப் பட்டது:
இதற்கிடையே, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Want to write for Maniyosai?


