கோல்கத்தா: காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளதாகவும், இந்தக் கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க விஷமிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வி அடையும் என்றும் திரிணாமும் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி
தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸும், திமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், திரிணாமுல் காங். - காங். கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப் பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து வங்க மொழி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்துள்ளார். அதில், “மக்கள் பிரச்சினைக்காக, திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து போராடும். ஆனால், காங்கிரஸுடனான கூட்டணியில் விரிசல் இல்லை.கூட்டணியை உடைக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது.
ஏழை மக்கள் ஏற்கனவே அவதி பட்டு வரும் போது பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்திருப்பது ஏற்புடையதல்ல” என்றார்.
Want to write for Maniyosai?


