சென்னை: அண்மையில் திமுக பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிமுக சார்பில் கொடுக்கப் பட்ட மனுவுக்கு விளக்கம் கேட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அவைத் தலைவர் ஆவுடையப்பன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கோவில்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகிய இருவரும் சில தினங்களுக்கு முன் நடந்த திமுக பொதுகுழு கூட்டத்தில் பங்கேற்றனர். இது அதிமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டம் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப் பட்டது.
இந்நிலையில் அதிமுக கொடுத்த மனுவுக்கு விளக்கம் கேட்டு 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவைத் தலைவர் ஆவுடையப்பன் இன்று (மார்ச் 1) நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Want to write for Maniyosai?


