சென்னை: நித்தியானந்தா என்ற பிரபல சாமியார், நடிகை ஒருவருடன் சல்லாபம் செய்வது போன்ற நீலப்படத்தை தனது செய்தி சேனலில் சன் டி.வி ஒளிப்பரப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நித்தியானந்தா என்பவர் பிரபல சாமியார். இவரது சொற்பொழிவும் பிரசித்தம்.
இவர் சினிமா நடிகை ஒருவருடன் சல்லாபம் செய்வது போன்ற வீடியோ காட்சியை தனது 24 மணி நேர செய்தி சேனலில் இன்று (மார்ச் 2) இரவு 8.30 மணி முதல், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தொடர்ந்து ஒளிப்பரப்பி வருகிறது.
நித்தியானந்தா என்று பெயர் குறிப்பிட்டு ஒளிப்பரப்பும் அந்த சேனல், நடிகை பெயரை துணிச்சலாக குறிப்பிட திராணி இல்லாமல், ‘ஆர்' நடிகை என்று கிசுகிசு பாணியில் குறிப்பிட்டுள்ளது. சுமார் 5 நிமிடங்கள் ஓடுகிறது இந்த நீலப் படம்.
இந்த நீலப் படம், திருட்டுத் தனமாக ஒளிப்பதவு செய்யப் பட்டது போல் அல்லாமல், உயர்தர கேமராவில் ஒளிப்பதிவு செய்யப் பட்டது போல் துல்லியமாக இருக்கிறது. இதனை, நித்தியானந்தாவை மிரட்டும் நோக்கில் யாராவது வேண்டும் என்றே எடுத்து தொலைக்காட்சி சேனலுக்கு அனுப்பியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
180 நாடுகளில், தமிழர்களால் விரும்பி பார்க்கப் படும், சன் டி.வி., தனது செய்தி சேனலில், மக்கள் பார்க்கும் நேரத்தில், கூச்சமில்லாமல் நீலப் படத்தை ஒளிப்பரப்பியிருப்பது, அந்த சேனலின் குறுகிய வியாபார நோக்கத்தை வெளிபடுத்துவதாக அமைந்துள்ளது.
Want to write for Maniyosai?



:sigh