சென்னை: நித்யானந்தா நடிகையுடன் இருந்த வீடியோவை எடுத்தது தாம்தான் என பெங்களூர் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்துள்ள அவரது சீடன் நித்ய தர்மானந்தா (எ) லெனின் கருப்பன் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தனிமையில் இருந்த வீடியோப் படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து நித்யானந்தா தலைமறைவு, ஆசிரமம் தாக்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நித்யானந்தாவின் சீடன் நித்ய தர்மானந்தா (எ) லெனின் சென்னை கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் அளித்துள்ளார். அதில் அவர் ஆசிரமத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும், 3 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் லெனின் கூறியுள்ளார். மேலும் நித்யானந்தா ஆசிரம பெண்களிடம் முறைக்கேடாக நடந்துக் கொள்வது மட்டுமின்றி நடிகை ரஞ்சிதாவையும் அடிக்கடி தனிமையில் சந்திப்பது தனக்குத் தெரிய வந்ததால் அதை வெளிப்படுத்த தான் ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும், அது நித்யானந்தாவுக்கு தெரிய வந்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த லெனின் கருப்பனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் குறிப்பிடும் சம்பவங்கள் அனைத்தும் பெங்களூரில் நடந்ததால் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்படுகிறது.
Want to write for Maniyosai?


