சென்னை: சாமியார் நித்தியானந்தாவுடன் வீடியோவில் இருப்பது தான் தான் என்று நடிகை ரஞ்சிதா கூறியுள்ளார்.
‘நாடோடித் தென்றல்', ‘கர்ணா' உட்பட சில படங்களில் நடித்தவர் ரஞ்சிதா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ராவணா படத்தில் நடித்து வருகிறாராம்.
இந்நிலையில், ரஞ்சிதாவும், சாமியார் நித்தியானந்தாவும் படுக்கையறையில் சல்லாபம் செய்வது போன்ற வீடியோவை, சில ஊடகங்கள் அண்மையில் ஒளிப்பரப்பியது.
இதனையடுத்து ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் தலை மறைவானதாக சொல்லப் பட்டது. நித்தியானந்தா, கும்ப மேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக, அவரது ஆசிரம அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், ரஞ்சிதா இருப்பிடம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், ரஞ்சிதா அளித்த பேட்டி குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
அந்தப் பேட்டியின் தொகுப்பு இதோ...
நிருபர்: அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?
ரஞ்சிதா: ஆமாம். நான்தான். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...
அந்த ஆபாச காட்சிகள்...
காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?
நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் அவரே சொல்வார்."
இவ்வாறு ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?


