maniyosai.com

You are here: Home செய்திகள் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்த பிறகே லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா: பிரணாப் தகவல்

அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்த பிறகே லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா: பிரணாப் தகவல்

E-mail Print
Share/Save/Bookmark

pranabபுதுதில்லி: அனைத்து கட்சியுடனும் ஆலோசனை நடத்திய பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப் படும் என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 

சில அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, கடந்த மார்ச் 9ம் தேதி, ராஜ்ஜிய சபாவில் நிறைவேற்றப் பட்டது.

ஆனால், மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் கடும் அதிருப்தியிலேயே இருந்து வருகின்றன.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உட்பட சில தலைவர்கள் இன்று (மார்ச் 11), மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்திய பிறகே மகளிர் இடஒதுக்கீடு யசோதா மக்களவையில் தாக்கல் செய்யப் படும் என அவர்களுக்கு, பிரணாப் முகர்ஜி உறுதியளித்ததாக தெரிகிறது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Thursday, 11 March 2010 17:30 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits