சிங்கபூர்: முன்னாள் பிசிசிஐ தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியில் இது வரை டேவிட் மார்கன் இருந்து வந்தார்.
இது குறித்து சரத் பவார் கூறுகையில்,
"ஐசிசி யின் பல முக்கிய விதிமுறைகளை நிர்ணயித்தவர் டேவிட் மார்கன். அவர் செய்த நற்பண்களை தொடர்வதே தற்போது என் கடமை." எனக் கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு ஐசிசி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட சரத் பவாரை, தலைவர் பணிக்கு பரிந்துரை செய்தவர் டேவிட் மார்கன்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
{metatitle: Sharad Pawar sworns in as new ICC president | ஐசிசி தலைவராக சரத் பவார் பதவியேற்பு}
Want to write for Maniyosai?


