புதுதில்லி: 9000 கோடி ரூபாய் மதிப்புள்ள அதிநவீன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையத்தை தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (ஜூலை 3) திறந்து வைத்தார்.இந்த விமான நிலையம் உலகத்திலேயே 6வது பெரிய விமான நிலையம் ஆகும்.
4 கிமி பரப்பளவு கொண்ட இந்த விமான நிலையத்தில் 80 சதவீத வேலைபாடுகள் கண்ணாடியில் செய்யப் பட்டுள்ளன. இந்த விமான நிலையம் நாளொன்றுக்கு மூன்றரை கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய விமான துறை, 2020ம் ஆண்டுக்குள் 120 பில்லியன் டாலர் முதலீடைப் பெறும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Want to write for Maniyosai?


