maniyosai.com

You are here: Home செய்திகள் தோணிக்கு திருமணம்

தோணிக்கு திருமணம்

E-mail Print
Share/Save/Bookmark

dhoniடேராடூன்: இந்திய கிரிக்கெட் அணி தலைவர் மகேந்திர சிங் தோணிக்கு இன்று (ஜுலை 4) இரவு டேராடூனில் திருமணம் நடக்கிறது. திருமண நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

தோணிக்கு நேற்று (ஜூலை 3) டேராடூனில் உள்ள பாகிரத் நட்சத்திர விடுதியில், அவரது பள்ளி தோழி சாக்‌ஷி சிங் ராவத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.  இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் முடிந்தவுடன் திருமணம் நடக்கும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், இன்று இரவே (ஜூலை 4) அவசர அவசரமாக திருமணம் நடக்கப் போகிறது. எனினும், திருமணம் பற்றி தோணி தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அணியில் சேர்ந்து குறுகிய காலத்திலேயே அணி தலைவராக முன்னேறியவர் தோணி. இவரது அதிரடி ஆட்டத்துக்கு விசிறிகள் அதிகம். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகர்கள் மிக அதிகம். நடிகை லட்சுமி ராயுடன் இவர் அதிக ‘நட்பு’ பாராட்டி வந்தார். இந்நிலையில், தன் பள்ளி தோழி சாக்‌ஷி சிங் ராவத்துடன் தோணிக்கு நேற்று (ஜூலை 3) திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தோணியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒருசில கிரிக்கெட் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

சாக்‌ஷி சிங் அவுரங்கபாத் நகரை சேர்ந்தவர். இவரும் தோணியும் ராஞ்சியில் டிஏவி பள்ளியில் ஒன்றாக படித்தார்களாம். தோணியின் தந்தையும், சாக்‌ஷியின் தந்தையும், மத்திய அரசு நிறுவனமான மெக்கானில் ஒன்றாக பணி புரிந்தனராம். சாக்‌ஷியின் தந்தை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவர்கள் குடும்பம் டேராடூனுக்கு சென்று விட்டதாம்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Sunday, 04 July 2010 17:41 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits