maniyosai.com

You are here: Home செய்திகள் ஜோசியம் சொல்லும் பலே ஆக்டோபஸ்: கொல்லத் துடிக்கும் ஜெர்மானியர்கள்

ஜோசியம் சொல்லும் பலே ஆக்டோபஸ்: கொல்லத் துடிக்கும் ஜெர்மானியர்கள்

E-mail Print
Share/Save/Bookmark

octopusபெர்லின்: தென் ஆப்ரிக்காவில் நடந்து வரும் கால்பந்து உலக கோப்பை போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் எந்த அணி வெல்லும் என துல்லியமாக கணித்து சொல்லும் பால் என பெயருடைய ஆக்டோபஸ் மீது ஜெர்மானியர்கள் ஏகப்பட்ட காண்டில் உள்ளனர்.

முக்கியமான விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது ஆட்ட முடிவு பற்றி சூதாட்டம் நடப்பது வழக்கம். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த ஒரு ஆக்டோபஸ் கால்பந்து உலக கோப்பை ஆட்டங்களின் முடிவுகளை துல்லியமாக கணித்து சொல்லும் தில்லாலங்கடியாக திகழ்கிறது. இது வரை 6 ஆட்டத்திற்கு இந்த ‘பால் ஆக்டோபஸ்’ ஆட்ட முடிவுகளை கணித்துள்ளது. இந்த ஆக்டோபஸ் கணித்து சொன்ன அணிகள்தான் 6 ஆட்டங்களிலும் ஜெயித்தன. கடந்த புதன் கிழமை ஸ்பெயினுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்த ஆட்டத்தில், ஸ்பெயினிடம் ஜெர்மனி தோல்வியை தழுவும் என ஆக்டோபஸ் கணித்து சொன்னது. ‘ஜெர்மனியா? தோல்வியா?? நோ சான்ஸ்’ என ஜெர்மனிய பகுத்தறிவு பகலவர்கள் சிலர் ஆணவத்தில் இருந்தனர். ஆனால், ஆக்டோபஸ் சொன்னதுதான் நடந்தது. இதனால், ‘பால் ஆக்டோபஸ்’ மீது ஜெர்மானியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

கணிப்பது எப்படி:

இரண்டு கண்ணாடி பெட்டிகள் ஆக்டோபஸுக்கான உணவு போடப் பட்டிருக்கும். ஒரு பெட்டியில், போட்டியில் விளையாடும் ஒரு அணியின் கொடியும், மற்றொரு பெட்டியில், மற்றொரு அணியின் கொடியும் ஒட்டப் பட்டிருக்கும். ஆக்டோபஸ் எந்த பெட்டியில் இருக்கும் உணவை உண்கிறதோ, அந்தப் பெட்டியில் ஒட்டப் பட்டிருக்கும் கொடியை உடைய அணிதான் ஆட்டத்தில் வெல்லும்.

ஜெர்மானியர்கள் அதிர்ச்சி:

அர்ஜெண்டினா, இங்கிலாந்து, கானா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் நடந்த ஆட்டங்களில் ஜெர்மனி அணி வெல்லும் என கணித்த ஆக்டோபஸ், அரை இறுதி போட்டியில் மட்டும் ஸ்பெயினிடம் ஜெர்மனி தோற்கும் என கணித்து சொன்னது. அது ‘வாய்’ வைத்த நேரம், அப்படியே பலித்து விட்டது. இதனால், ஜெர்மனி கால்பந்து ரசிகர்கள் ‘பால் ஆக்டோபஸ்’ மீது ஆத்திரத்தில் உள்ளனர்.

ஜெர்மானிய பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் இப்போது ‘பால் ஆக்டோபஸ்’ பற்றிதான் பேச்சு. ‘பால்’ ஆக்டோபஸை எப்படியெல்லாம் கொல்வது என்பது பற்றி இணையதளங்களில் ஜெர்மன் ரசிகர்கள் குரூரமாக விவாதித்து வருகின்றனர்.

பொது இடத்தில் பால் ஆக்டோபஸை வைத்து வறுத்தெடுக்க வேண்டும், எரியும் வாணலியில் பால் ஆக்டோபஸை எரிய வேண்டும் என்றெல்லாம் இணையதளங்களில் ஜெர்மானியர்கள் புலம்பி வருகின்றனர்.

அடுத்து என்ன?

ஜெர்மனிக்கும் உருகுவே அணிக்குமிடையே நாளை (ஜூலை 10) போட்டி நடக்கப் போகிறது. இந்த அணியில் ஜெயிக்கும் அணி, உலக கோப்பை போட்டிகளில் மூன்றாவது இடத்தை பிடிக்கும். அதே போல, கால்பந்து உலக கோப்பை இறுதி போட்டி ஸ்பெயினுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது. இந்த போட்டிகளில் ஜெயிக்கப் போவது யார் என ‘பால் ஆக்டோபஸ்’ இன்று (ஜூலை 9) கணித்து சொல்லி விடும். இதனை, ஜெர்மன்,ஸ்பெயின், நெதர்லந்து தொலைக்காட்சி சேனல்கள் நேரடி ஒளிப்பரப்பு வேறு செய்ய உள்ளனர்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits