maniyosai.com

You are here: Home செய்திகள் கோவையில் அதிமுக ஆர்பாட்டம். 50 ஆயிரம் பேர் திரண்டனர்.

கோவையில் அதிமுக ஆர்பாட்டம். 50 ஆயிரம் பேர் திரண்டனர்.

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaகோவை: அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு, மின் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மத்திய மாநில அரசைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இன்று (13/07/2010) கோவை வ.உ.சி மைதானத்தில் பொதுக் கூட்டம் மற்றும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இது நேரடியாக ஜெயலலிதாவின் தலைமையில் நடைப்பெறுவதால் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் கூட்டத்திற்கு திரண்டு வந்தனர்.

இக்கூட்டத்தில் கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தருவதாகக் கூறிவிட்டு சமையலுக்கு தேவையான மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையை பல மடங்கு ஏற்றி மக்களை ஏமாற்றுகிறார் என ஜெயலலிதாக் கூறினார். மேலும் மின் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் தொழில்கள் பாதிப்படைந்துள்ளது. அதை சரி செய்ய திமுக அரசு எந்தவித முயற்சியும் செய்யவில்லை. மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. போலி மருந்து, போலி மது என அனைத்திலும் போலி பொருட்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கி அதனால் அவரது குடும்பத்தினர் கேபிள் வருமானத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.

சர்வாதிகாரியின் ஆட்சியில் கூட அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர், பெரிய மகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி என முக்கியப் பதவிகள் அனைத்தும் குடும்பத்துக்குள்ளேயே பங்குப் போட்டுக் கொள்ளப்படவில்லை. இது தேர்தல் ஆண்டு. வெகு விரைவில் தேர்தல் அறிவிப்பு வந்து விடும். அதனால் அதிமுகவினரும் பொது மக்களும் சேர்ந்து சர்வாதிகார ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம் என கூட்டத்தில் ஜெயலலிதா கோஷமிட்டார்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits