புதுடெல்லி: நக்சல் பிரச்சினைக் குறித்து விவாதிக்க இன்று(14/07/2010) 6 மாநில முதல்வர்கள் பிரதமருடன் ஆலோசனை நடத்துகின்றனர். ஒரிசா, சட்டீஸ்கர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் நக்சல் பிரச்சினை மிகத் தீவிரமாக உள்ளது. இதுக் குறித்து ஆலோசிக்க அந்த மாநில முதல்வர்கள் டெல்லியில் இன்று (14/07/2010) பிரதமரை சந்திக்கின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடப்பதால் அம்மாநில ஆளுனர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார்.
நக்சல்களை ஒடுக்குவது மட்டுமின்றி மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலதிட்டங்கள் மக்களை எந்தளவிற்கு சென்றடைந்துள்ளது என்பது குறித்து பிரதமர் அம்மாநில முதல்மைச்சர்களுடன் விவாதிப்பார். மேலும் நக்சல்களுடன் நடக்கும் போராட்டத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் பெருமளவு பலியாகி வருகின்றனர். இதற்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் இல்லாமல் இருப்பதேக் காரணம். அதனால் நக்சல்களை எதிர்க்கொள்ள பாதுகாப்பு படைவீரர்களுக்கு போதிய பயிற்சியளிப்பதுக் குறித்தும் விவாதிக்கப்படும்.
இப்பொழுது நக்சல்கள் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சீனாவும் நேபாளமும் வழங்கி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுக் குறித்தும் பிரதமர் இந்தக் கூட்டத்தில் விவாதிப்பார்.
இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்துக் கொண்டு 6 மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிப்பார்.
Want to write for Maniyosai?


