புதுதில்லி: செய்தி தலைப்பை படித்து விட்டு நீங்கள் ஒன்றுக்கு இரண்டு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டிருந்தால் மன்னிக்கவும். ஒரு மணி நேர பிரதமர் ஆனால் லாலு பிரசாத் யாதவ் செய்யக் கூடிய செயலைதான் தலைப்பாக எழுதியுள்ளோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு விவகாரத்தில் நேற்று (ஆக.20) நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால், மக்களவை ஒத்திவைக்கப் பட்டது.
அப்போது, அமளியில் ஈடுபட்ட, பொழுது போகாத 75 எம்.பி.க்களும் சேர்ந்து ஒரு டுபாக்கூர் அமைச்சரவையை ஏற்படுத்தினர்.
அதில், பிரதமர் பதவி லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப் பட்டது! இரண்டாவது பிரதமர் (?) முலாயம் சிங் யாதவ்!! பாஜகவை சேர்ந்த கோபிநாத் முண்டே சபாநாயகராக நியமிக்கப் பட்டார்.
ஒரு மணி நேர பிரதமராக லாலு பதவியேற்றதும் முதல் செயலாக, சர்வாதிகார அரசாக இருப்பதால் மன்மோகன் சிங் அரசை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார். மேலும், நேற்றைய தினம் (ஆக.20) நிறைவேற்றப் பட்ட மசோதாக்களையும் ரத்து செய்து பிரதமர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவிட்டார்.
நல்ல வேளை, இதெல்லாம் லாலுவின் கற்பனையே!!
Want to write for Maniyosai?


