சென்னை: முதல்வர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஆக.23) நேரில் சந்தித்து தனது இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமண பத்திரிக்கையைக் கொடுத்தார்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் செப்டம்பர் 3ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமண பத்திரிக்கை கொடுக்க நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை (ஆக.23) முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றிருந்தார். ரஜினிகாந்துடன் அவர் மனைவி லதாவும் சென்றிருந்தார்.
அப்போது, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் முதல்வருக்கு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் உடனிருந்தார்.
ஜெயலலிதாவுக்கும் அழைப்பு:
நடிகர் ரஜினிகாந்த், அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவையும் அவரது இல்லத்தில் சந்தித்து, மகள் செளந்தர்யாவின் திருமண பத்திரிக்கையை கொடுத்தார்.
Want to write for Maniyosai?


