புதுதில்லி: காவி பயங்கரவாதம் அதிகரித்து விட்டதாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்த கருத்துக்கு மாநிலங்களவையில் பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆக.25ம் தேதி புதுதில்லியில் நடந்த போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், காவி பயங்கரவாதம் (இந்து பயங்கரவாதம்) அதிகரித்து விட்டதாக கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆக.27) காலை மாநிலங்களவை கூடியதும், சிவசேனா உறுப்பினர் மனோகர் ஜோஷி, சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி விவாதிக்க வேண்டும் என கூறினார். மனோகர் ஜோஷியின் கருத்துக்கு பாஜக உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். ’இந்துக்களுக்கு நிகழும் அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாது’என கோஷங்கள் எழுப்பப் பட்டன.
இதனால் அவை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப் பட்டது. அவை மீண்டும் கூடியதும், இதே பிரச்சினையை எழுப்பி சிவசேனா மற்றும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து,அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி, மதியம் வரை அவையை ஒத்திவைத்தார்.
Want to write for Maniyosai?



உண்மையை கூறினால் காவிக்கூட்டத்திற்கு கசக்கத்தாநே செய்யும். தென்காசி ஒன்று போதாதா! காவிபயங்கரவாதத்திற்கு அத்தாட்சி இனி காவியின் சாயம் வெளுக்கம் நேரம் வந்து விட்டது.