maniyosai.com

You are here: Home செய்திகள் ரஜினி மகள் செளந்தர்யா கல்யாணம்: பிரபலங்கள் வாழ்த்து

ரஜினி மகள் செளந்தர்யா கல்யாணம்: பிரபலங்கள் வாழ்த்து

E-mail Print
Share/Save/Bookmark

rajni in an emotional moodசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் சென்னை ராணி மெய்யம்மை மண்டபத்தில் இன்று காலை (செப்.3)காலை திருமணம் நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரண்டாம் மகள் செளந்தர்யா. இவருக்கும், சென்னை தொழிலதிபர் அஸ்வினுக்கும் திருமணம், இரு வீட்டு பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டது.

இன்று (செப்.3) திருமணம் நடப்பதால், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, திருமாவளவன், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்ளுக்கும், விஜயகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களுக்கும் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று காலை 8 மணிக்கு , இந்து சம்பிரதாயப் படி மங்கள வாத்தியங்கள் முழங்க, மணமகள் செளந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். திருமணத்துக்கு வந்திருந்தவர்களை ரஜினியே முன் நின்று வரவேற்றார்.

கொடநாட்டில் இருப்பதால் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.

இந்த திருமண நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தா.பாண்டியன், நல்லகண்ணு, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும்,  விஜயகாந்த், சரத்குமார், சிவகுமார், பிரபு, பாக்யராஜ், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் , இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பி.வாசு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண புகைப்படங்களைப் பார்க்கவும்...




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits