கோல்கத்தா: நாசவேலைகள் பற்றி ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுப்பவர்களுக்கு ரயில்வே வேலை கொடுக்கப் படும் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில், உள்ளூர் ரயில்களை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு வங்க மாநிலத்தில் நாசவேலைகளை அரங்கேற்றி ரயில்வே துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க சிலர் சதி செய்கின்றனர். தனால், ரயில் தண்டவாளங்கள் துண்டிக்கப்படுகின்றன. சிக்னல்கள் முடக்கப்படுகின்றன.
இத்தகைய, நாசவேலை பற்றி யாராவது தகவல் கொடுத்தால், அவர்களுக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கப்படும். யாரிடம் தகவல் கொடுப்பது என்பதை ரயில்வே பொது மேலாளர்கள் சொல்வார்கள்.
அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காக ரயில்வே சொத்துகளை நாசம் செய்யக்கூடாது. பொதுமக்களும், அரசியல் கட்சிகள் சொல்வதற்காக, நாசவேலையில் ஈடுபடக் கூடாது.
நகராட்சி தேர்தல் நெருங்கிய வேளையில், ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு நடைபெற்றது. அதுபோல், துர்கா பூஜை நெருங்கும் போது மீண்டும் நாசவேலை நடக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
Want to write for Maniyosai?


