maniyosai.com

You are here: Home செய்திகள் ஒரு நாள் பந்த்: கேரளா, மே.வங்கத்தில் அமோகம்; தமிழகத்தில் தோல்வி

ஒரு நாள் பந்த்: கேரளா, மே.வங்கத்தில் அமோகம்; தமிழகத்தில் தோல்வி

E-mail Print
Share/Save/Bookmark

communistசென்னை/புதுதில்லி: விலைவாசி உயர்வு, அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத போக்கு, பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு என பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி, முக்கியமான தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் ஒரு நாள் பந்த் இன்று (செப்.7) நடந்து வருகிறது.

இந்த ஒரு நாள் வேலைநிறுத்தத்தால் கம்யூனிஸ்டுகள் ஆட்சி நடக்கும் கேரளா மற்றும் கோல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள் என பொது வாகனங்கள் எவையும் ஓடவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பல இடங்களில் மூடப் பட்டுள்ளன.

வங்கி ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். கோல்கத்தாவுக்கு பல் வேறு ஊர்களில் இருந்து செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

தமிழகத்தில் தோல்வி:

தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு இல்லை. அரசு மற்றும் தனியார் வாகனங்கள் ஓடுகின்றன. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவங்கள் திறந்துள்ளன. ரயில் சேவைகளிலும் எந்த பாதிப்பும் இல்லை.

இந்த வேலை நிறுத்தத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 07 September 2010 12:02 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 205 Hits