பந்த்நகர் (உத்தரகாண்ட்): ஆண்டுக்கு 2 சதவீதமாக இருக்கும் விவசாய வளர்ச்சி, 4 சதவீதமாக உயர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
கோவிந்த் பல்லப் பந்த் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் இன்று (ஜூன் 19) பங்கேற்று பேசிய மன்மோகன் சிங், விவசாயத் துறையில் வளர்ச்சி ஏற்பட விவசாய விஞ்ஞானிகள் உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
“நாட்டின் வளர்ந்து வரும் ஜனத்தொகைக்கு ஈடுக் கொடுக்கும் அளவு விவசாயத் துறையில் வளர்ச்சி இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 சதவீதமாக இருக்கும் விவசாய வளர்ச்சி, 4 சதவீதமாக உயர வேண்டும். இதற்கு விவசாயத் துறை விஞ்ஞானிகள் உழைக்க வேண்டும்.
நாட்டில் பின் தங்கியிருக்கும் பகுதிகளில் விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும். விவசாய உற்பத்தி அதிகரிக்க, விவசாய நிலங்களின் அளவை அதிகரிக்க வேண்டும்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயத் துறையில் வளர்ச்சி அதிகரிக்காத வரை, இது உண்மையான வளர்ச்சி என கருத முடியாது.” இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
Want to write for Maniyosai?





