maniyosai.com

You are here: Home செய்திகள் கோட்டோவியர் ஆர்.கே.லட்சுமன் உடல்நிலை கவலைக்கிடம்

கோட்டோவியர் ஆர்.கே.லட்சுமன் உடல்நிலை கவலைக்கிடம்

E-mail Print
Share/Save/Bookmark

common manமும்பை: பிரபல கோட்டோவியர் (கார்டூனிஸ்ட்) ஆர்.கே.லட்சுமண் (86) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆர்.கே.லட்சுமணுக்கு கடந்த வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக புனேவில் உள்ள சக்யாத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.அங்கு அவருக்கு மேலும் இரண்டு முறை லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவரது உடலின் இடது பக்க உறுப்புகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியது. பேசும் ஆற்றலும் பாதிக்கப் பட்டது.

இந்நிலையில், விமானம் மூலம் நேற்று மாலை (ஜூன் 20) மும்பை அழைத்து வரப் பட்டார் ஆர்.கே.லட்சுமண். மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப் பட்டுள்ளார்.

நீரிழிவு நோயாளியான லட்சுமணுக்கு, சிறுநீரகமும் பாதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு எதையும் சொல்ல முடியாது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்.கே.லட்சுமண் உருவாக்கிய ‘திருவாளர் பொதுஜனம்’ என்ற கோட்டோவிய கதாபாத்திரம் மிகவும் பிரசித்தம். திருவாளர் பொதுஜனத்தின் சிலையே புனே நகரில் உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். இவர் மறைந்த எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத் தக்கது.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

01 January 2012, 19.07 செய்திகள்
அண்ணா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி - நலமாக உள்ளார்
புனே: ஊழலுக்கு எதிரான வலிமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற...மேலும்...
0 Comments , 74 Hits
17 September 2011, 21.17 செய்திகள்
ஆக்ரா மருத்துவமனையில் குண்டுவெடிப்பு
ஆக்ரா: உத்திரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தனியார்...மேலும்...
0 Comments , 107 Hits
25 January 2012, 20.27 சம்பவம்
புனே பேருந்து ஓட்டுநரின் கொலை வெறி : 9 பேர் பலி
புனே : மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழக பேருந்து இன்று காலை (ஜன.25)...மேலும்...
0 Comments , 42 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits