maniyosai.com

You are here: Home செய்திகள் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு: மதானி கைது

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு: மதானி கைது

E-mail Print
Share/Save/Bookmark

madhaniபெங்களூரு: 2008ம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி இன்று (17/08/2010) கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

2008ம் ஆண்டு கர்நாடக தலைநகரம் பெங்களூரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். 15 பேர் காயமுற்றனர். இதில் கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் தொடர்பு இருப்பதாக கருதி இவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரை கைது செய்ய 3 முறை பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் இவரை கைது செய்ய முடியவில்லை. அதனால் 4வது முறையாக பிடிவாரண்ட் போடப்பட்டு அதற்கு இன்று (17/08/2010) கடைசி நாள் என்றும் கெடு வைத்தது. அதனால் கேரளாவில் முகாமிட்டிருந்த கர்நாடக போலீசார் மதானியை இன்று (17/08/2010) கைது செய்தனர். அவர் இன்று கைது செய்யப்படக்கூடும் என எதிர்ப்பார்த்திருந்த அவரது ஆதரவாளர்களும் அவரது வீட்டில் கூடியிருந்தனர். அதனால் மதானி கைது செய்யப்பட்டப் போது போலீசுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

மதானி உருக்கம்: இது தனக்கு எதிராக செய்யப்பட்ட சதி என முன்னதாக நிருபர்களிடம் பேசிய மதானி கூறியுள்ளார். தான் சரணடைய நினைத்திருந்த வேளையில் போலீசார் தன்னை கைது செய்வதிலேயே ஆர்வமாக உள்ளனர் என்றும் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எநத தொடர்பும் இல்லை. இப்பொழுது பெங்களூர் குண்டு வெடிப்பு என்பார்கள் பின்னர் ஒவ்வொன்றாகக் கூறி உலக வர்த்தக மையம் வரை நடந்த அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவார்கள். அதனால் இப்பொழுது செல்லும் நான் திரும்பி வருவேனா என பார்க்க்கலாம் என உருக்கமாகப் பேசி தனது ஆதரவாளர்களுக்கு முத்தம் கொடுத்து கண்ணீர் விட்டார் மதானி.








Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

16 October 2011, 13.27 தலைப்புச் செய்திகள்
எடியூரப்பா கைது: திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு நில மோசடி...மேலும்...
0 Comments , 96 Hits
27 October 2011, 09.29 தலைப்புச் செய்திகள்
பயண எச்சரிக்கையை திரும்ப பெற ஆஸ்திரேலியாவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
புதுதில்லி: தீபாவளி பண்டிகை காலத்தில் இந்தியாவுக்கு செல்வதை...மேலும்...
0 Comments , 95 Hits
03 February 2012, 19.14 புகைப்படச் செய்தி
சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக...மேலும்...
0 Comments , 20 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits