பாட்நா: மாவோயிஸ்டு போராளிகளால் கடத்தப் பட்ட 3 காவல் துறையினரும் இன்று (செப்.5) விடுவிக்கப் பட்டுள்ளதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
4 காவலர்களை மாவோயிஸ்டு போராளிகள் சில தினங்களுக்கு முன் கடத்தி வைத்துக் கொண்டனர். இதில் ஒருவர் மாவோயிஸ்டுகளால் கொல்லப் பட்டார்.
இந்நிலையில் இன்று காலை (செப்.5) , கடத்தப் பட்ட 3 காவலர்களையும் மாவோயிஸ்டுகள் விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தப் பட்ட காவலர்களில் ஒருவரான அபய் குமார் யாதவ்வின் மனைவி ரஜினி தேவி நிருபர்களிடம் கூறுகையில், மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் இன்று காலை (செப்.5) தன் வீட்டுக்கு வந்து, தன் கணவரை விடுவித்து விட்டதாக தெரிவித்ததாக, சொல்லியுள்ளார்.
ஆனால், இந்த தகவலை பிகார் காவல்துறை மறுத்துள்ளது.
Want to write for Maniyosai?





