புதுதில்லி: அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
அண்மையில், உணவு கிடங்குகளில், உணவு தானியங்கள் அதிக அளவில் வீணாவதை தடுக்க, அவற்றை வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் சற்று கண்டிப்புடன் அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், புதுதில்லியில் இன்று (செப்.6) செய்தியாளர்களிடம் பிரதமர் கூறியதாவது:
"இந்தியாவில் 37 சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அனைவருக்கும் எப்படி இலவசமாக உணவு தானியங்களை வழங்குவது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை இன்னும் நான் வாசிக்கவில்லை. ஏழைகளுக்கு சலுகை விலையில் உணவு தானியங்கள் வழங்கப் பட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை."
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
Want to write for Maniyosai?





