maniyosai.com

You are here: Home செய்திகள் பிரபல நடிகர் முரளி மரணம்.

பிரபல நடிகர் முரளி மரணம்.

E-mail Print
Share/Save/Bookmark

actor muraliசென்னை: பிரபல நடிகர் முரளி இன்று (08/09/2010) காலை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.


’பூவிலங்கு’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் முரளி.  கல்லூரி மாணவன் வேடங்களில் அதிகமாக நடித்து பெயர்பெற்றவர்.  கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரின் இயற்பெயர் கார்த்திக். திரைப்படத்திற்காக தனது பெயரை முரளி என மாற்றிக்கொண்டார்.

 

இயக்குனர் கதிரின் இயக்கத்தில் 1991ம் ஆண்டு முரளி நடித்து வெளிவந்த ’இதயம்’ திரைப்படம் அவருக்கு பெரும்புகழை ஈட்டித் தந்தது.

இவர் பூவிலங்கு, இதயம், பொற்காலம் என பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.தற்போது நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக ‘பாணா காத்தாடி’ என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார். அப்படத்தில் முரளி எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு மாணவனாக நடித்திருக்கிறார். முரளி நடித்த 'கவசம்' படம் விரைவில் வெளியாகவுள்ளது.

நேற்று(07/09/2010) இரவு நெஞ்சுவலிக் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று(08/09/2010) அதிகாலை மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முரளியின் உடல் நாளை தகனம் செய்யப் படுகிறது. அவரது உடலுக்கு, நடிகர் சிவகுமார், பார்த்திபன், இயக்குனர் சேரன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் முரளியின் படங்கள்:


பூவிலங்கு
பகல் நிலவு
தங்கமணி ரங்கமணி
புது வசந்தம்
பாலம்
வெற்றி மலை
சிலம்பு
நானும் இந்த ஊருதான்
நாங்கள் புதியவர்கள்
சிறையில் சில ராகங்கள்
புதிய காற்று
நம்ம ஊரு பூவாத்தா
சாமி போட்ட முடிச்சு
இதயம்
குறும்புக்காரன்
தங்க மனசுக்காரன்
சின்ன பசங்க நாங்க
தங்கராசு
என்றும் அன்புடன்
தாலி கட்டிய ராசா
மணிக்குயில்
தங்க கிளி
மஞ்சு விரட்டு
அதர்மம்
என் ஆசை மச்சான்
சத்யவான்
ஆகாய பூக்கள்
தொண்டன்
‌பொம்மை
காலமெல்லாம் காதல் வாழ்க
‌போர்க்களம்
ரோஜா மலரே
காதலே நிம்மதி
தினந்தோறும்
வீர தாலாட்டு
ரத்னா
பூந்தோட்டம்
என் ஆசை ராசாவே
உன்னுடன்
தேசிய கீதம்
பூவாசம்
கனவே கலையாதே
ஊட்டி
இரணியன்
வெற்றி ‌கொடி கட்டு
மனு நீதி
கண்ணுக்கு கண்ணாக
சொன்னால்தான் காதலா
ஆனந்தம்
சமுத்திரம்
அள்ளித்தந்த வானம்
கடல் பூக்கள்
சுந்தரா டிராவல்ஸ்
காமராசு
நம்ம வீட்டு கல்யாணம்
காதலுடன்
அறிவுமணி
பேசா கிளிகள்
எங்க ராசி நல்ல ராசி
நீ உன்னை அறிந்தால்
பானா காத்தாடி
கவசம் (தயாரிப்பு பணியில் உள்ளது)



 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 08 September 2010 12:07 )  


More and More


கிட்டதட்ட

04 October 2011, 09.35 திரைப்பட விமர்சனம்
வாகை சூட வா
களவாணி படத்தில் சிரிக்க மட்டும் வைத்த இயக்குனர் சற்குணம் 'வாகை சூட...மேலும்...
0 Comments , 293 Hits
29 November 2011, 19.40 திரைப்பட விமர்சனம்
மயக்கம் என்ன - விமர்சனம்
அழகான ஒன் லைன், மிக அழகான கேமரா, புதுமையான இசை இவையெல்லாம்...மேலும்...
0 Comments , 206 Hits
15 September 2011, 21.06 சினிமா செய்திகள்
தீபாவளிக்கு சகுனி
கார்த்தி, பிரணிதா நடிக்கும் சகுனி படம் தீபாவளி நாளன்று திரைக்கு...மேலும்...
0 Comments , 138 Hits

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits