லக்னோ: உ.பி., மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அயோத்தியாவில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப் படும் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உ.பி., மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கை, கட்சியின் மூத்த தலைவர்கள் உமா பாரதி, கல்ராஜ் மிஷ்ரா, முக்தார் அப்பாஸ் நக்வி, உ.பி., மாநில பாஜக தலைவர் சூரிய பிரதாப் ஷாகி உள்ளிட்டோர் முன்னிலையில் லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று (ஜன.27) வெளியிடப் பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையில், 'பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப் பட வேண்டும் என்பது நாட்டில் உள்ள கோடிக் கணக்கான மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம். ராமபிரான், இந்தியாவின் கவுரவத்தின் சின்னம். துரதிருஷ்டவசமாக, போலி மதசார்பின்மை காரணமாகவும், வாக்கு வங்கி அரசியல் காரணமாகவும் ராமர் கோயில் கட்டப் படுவது எதிர்கட்சிகளால் எதிர்க்கப் படுகிறது.' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து உ.பி., மாநில பாஜக தலைவர் சூரிய பிரதாப் ஷாகி கூறுகையில், ' இந்து மதம் நாட்டின் வாழ்க்கை நெறியின் சாரமாக திகழ்கிறது என்ற கருத்தை பாஜக கொண்டுள்ளது. ஆனால், வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள் உள்ளிட்டோர் எதிர்த்து வருகின்றனர்.' என்றார்.
பாஜகவின் சட்டமன்ற தலைவர் ஓம் பிரகாஷ் கூறுகையில், ' சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு எடுக்கப் பட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், சிறுபான்மையினருக்கு வழங்கப் படும் இந்த 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு ரத்து செய்யப் படும்.' என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app





