சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின் தொழிலாளர் விரோத செயல்களை துணை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.
கம்யூனிஸ்டு தொழிற்சங்கமான செங்குடி தொழிற்சங்கத்தை சேர்ந்த 3 ஆயிரம் தொழிலாளர்கள், திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இன்று (செப்.7) இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக பல்வேறு கொடுமைகள் செய்யப்பட்டன. தொழிலாளர் வர்க்கத்திற்கு தொடர்ந்து பாடுபடுவது திமுகதான்.
கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் மீது, கொடுமையான சட்டங்கள் ஏவப்பட்டதை தற்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் மறந்து விட்டனர். டெஸ்மா, எஸ்மா சட்டங்களை ரத்து செய்தது திமுக ஆட்சிதான்.
திமுக ஆட்சியையும், முதல்வர் கருணாநிதியையும் பொதுமக்கள் நம்புகிறார்கள். இந்த ஆட்சியை விட வேறு எந்த ஆட்சியும் தங்களுக்கு நன்மை செய்ய முடியாது என்று மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால்தான் பல்வேறு அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் திமுகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.
இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Want to write for Maniyosai?
Download our android app



