வாஷிங்டன்: கடந்த மே மாதம் தீவிரவாதி ஒசாமா பின் லேடனை கண்டுபிடித்து அழித்தது அமெரிக்கா. அப்போது ஒசாமா பதுங்கியிருந்த வீட்டை அமெரிக்காவிற்கு காட்டிக்கொடுத்தது பாகிஸ்தானை சேர்ந்த ஒரு டாக்டர்தான் என்று அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லியோன் பனட்டா வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
சிபிஎஸ் 60 நிமிடங்கள் (CBS's 60 Minutes) என்னும் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பானட்டா பாக். டாக்டர் ஷகில் அஃப்ரிடி என்பவர்தான் தீவிரவாதி பின் லேடன் பாகிஸ்தானில் அபட்டாபாடில் தங்கியிருந்த தகவலை கொடுத்தார் என்று கூறியுள்ளார். இந்த நேர்காணல் நாளை (ஜன-29) சிபிஎஸ் 60 நிமிடம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படவுள்ளது.
அமெரிக்க உளவுத்துறையான CIA சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி திட்டம் தொடர்பாக மரபணு மாதிரி திரட்டும் பணியில் அமர்த்தப்பட்டிருந்த டாக்டர் அஃப்ரிடிதான் ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தை உறுதி செய்தார். அவர் பாக் அரசால் தேச துரோக குற்றம் சாட்ட்ப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டாக்டரை குறித்து மிகவும் கவலையுற்றிருப்பதாக பனட்டா கூறினார்.
60 நிமிட நேர்காணலில் மேலும் பனட்டா கூறுகையில் பாகிஸ்தான் அரசில் பணிபுரிந்த யாரோ ஒருவருக்கு பின் லேடன் அந்த குறிப்பிட்ட காம்பவுண்டின் உள்ளே பதுங்கி இருந்ததை உணர்ந்துகொள்ளும் அறிவு இருந்திருக்கிறது என்றார். ஆனால் பாகிஸ்தான் அரசு பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை முன்னதாகவே தெரிந்துதான் வைத்திருந்ததா என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று பன்பட்டா மேலும் கூறினார்.
பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு அடங்கும் வரை ஷகில் அஃப்ரிடி விஷயத்தை அடக்கிவைத்திருந்துவிட்டு, பின்னர் அவரை அமெரிக்காவின் வசம் ஒப்படைக்கலாம் என்று பாகிஸ்தான் திட்டமிட்டிருததாக பனட்டா குறிப்பிட்டார். இத் தகவலை வெளியிட்ட இரண்டு பாக் அதிகாரிகள் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார். ஏனென்றால் அஃப்ரிடி மீதான தேசதுரோக வழக்கு பாக் அரசின் நிலுவையில் உள்ளதால் அந்த அதிகாரிகள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லையாம்.
Want to write for Maniyosai?
Download our android app



