maniyosai.com

You are here: Home செய்திகள் அசின் மீது கூடிய விரைவில் நடவடிக்கை

அசின் மீது கூடிய விரைவில் நடவடிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

asinசென்னை: படத்தின் லொகேஷனை மாற்றும் உரிமை நடிகைக்கு இல்லை. நான் ஒரு நடிகையாகத் தான் இலங்கைக்கு சென்றுள்ளேன் எனக் கூறிய அசின் தமிழ் விரோதி ராஜபக்சேவின் மனைவியுடன் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டது புகைப்படத்துடன் வெளியானதால் தமிழின உணர்வாளர்களும் தமிழ் திரைப்பட சங்கத்தினரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

ராஜபக்சேவின் தமிழின கொலைவெறித் தாக்குதல் உலகமறிந்த விஷயம். இந்த கொலை வெறித் தாக்குதலை நமது மத்திய மாநில அரசுக் கண்டும் காணாதது மாதிரி இருப்பதால் தமிழின ஆதரவாளர்கள் இடையே கொதிப்பு அதிகரித்துள்ளது.

இருப்பினும் எதுவும் பெரிதாக செய்ய இயலாவிட்டாலும் ஏதோ தங்களால் ஆன எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இலங்கையில் சர்வதேச திரைப்பட விழா நடந்தப் போது பாலிவுட் திரைப்பட கலைஞர்களை கூட இதில் கலந்துக் கொள்ள வேண்டாம் என தமிழ் திரைப்பட சங்கம் வேண்டுக்கோள் விடுத்தது. இதுவரை தமிழில் ஒரு படத்தில் கூட நடித்திராவிட்டாலும் பாலிவுட் பெரும்புள்ளிகளான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாரூக் கான் ஆகியோரும் தமிழில் ஒரு சில படங்கள் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் போன்றோர் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அந்த திரைப்பட விழாவைப் புறக்கணித்தனர். ஆனால் தமிழில் நிறையப் படங்கள் நடித்து, தமிழ் படமான ’கஜினி’யின் வெற்றி மூலம் பிரபலமடைந்து ஹிந்தித் திரையுலகுக்கும் சென்றுள்ள அசின் தமிழர்களின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

இதற்கு தான் ஒரு நடிகையாகத் தான் இலங்கைக்கு சென்றுள்ளேன். படத்தின் லொகேஷனை மாற்றும் உரிமை இயக்குனர் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் உண்டு. ஒரு நடிகை இதில் தலையிட முடியாது. மேலும் இந்தியாவிலிருந்து எத்தனையோ பேர் இலங்கை சென்று வருவதில்லையா எனக் கேள்வியும் எழுப்பினார். ஆனால் ஒரு நடிகையாய் படப்பிடிப்பில் மட்டும் கலந்துக்கொள்ளாமல் தமிழின துரோகி ராஜபக்சேவின் மனைவியுடன் இணைந்து நல்லெண்ணத் தூதுவரைப் போல அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்டு வருகிறார். இதுக் குறித்து  நடிகர் சங்க செயலாளர் ராதாரவி குறிப்பிடும்போது அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். என்ன நடவடிக்கை என்பது ஓரிரு நாட்களில் திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என்றார்.

அசின் தற்போது விஜயுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படமே தமிழில் அவரது கடைசிப் படமாக இருக்க வேண்டும் என்பது தமிழ் ஆதரவாளர்களின் விருப்பம்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits