தேனி: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியேறும் என்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (பிப்.6) நடந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், தி.மு.க. அரசின் நடவடிக்கைகளால், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீது 15 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படுகிறது.
மின்சார தட்டுப்பாட்டைப் போக்க, இந்த மைனாரிட்டி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் சட்டபை தேர்தலில் தி.மு.க. தனித்து நின்றால் படுதோல்வியை சந்திக்கும்.சட்டசபை தேர்தலுக்குள், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறும். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,
வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வர் ஆவது உறுதி என்றார் பன்னீர் செல்வம்.
Want to write for Maniyosai?
Download our android app





சும்மா கிளப்பறாங்கபா பீதியை