சென்னை: மதுரையில் பொது கூட்டம் நடத்தவிருக்கும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளனர்.
கடந்த வாரம், அதிமுகவின் கட்சி தொலைக்காட்சியான ஜெயா டிவியின் ஈக்காடுதாங்கல் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்தது. மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் இருந்து அறிவொளி என்ற பெயரில் வந்திருந்த அந்த கடிதத்தில், ’அண்ணனை’ பகைத்துக் கொண்டு ஜெயலலிதா மதுரைக்கு வந்தால், குண்டு வீசி கொல்லப் படுவார் என்றும் அதை நேரடியாக ஒளிப்பரப்ப ஜெயா டிவியும் மதுரை வர வேண்டும் எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.
இதையடுத்து ஜெயா டிவி. சார்பில் அதன் பொது மேலாளர் ரங்கராஜன், டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த வாரம் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வம் , கே.ஏ. செங்கோட்டையன், பி.கே. சேகர்பாபு, செந்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரிடம் இன்று (ஆக.30) மனு கொடுத்தனர்.
அப்போது நிருபர்களிடம் செங்கோட்டையன் கூரியதாவது:
மதுரையில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் ஜெயலலிதா கலந்து கொள்ளக்கூடாது என கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஜெயலலிதாவுக்கு உச்சச்கட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் ஸ்ரீபதி, உள்துறை செயலாளர் ஞானதேசிகனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app





