maniyosai.com

You are here: Home செய்திகள் பொது கழிப்பிடம் ஆக்கிரமிப்பு: சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம் - ஜெ. அறிவிப்பு

பொது கழிப்பிடம் ஆக்கிரமிப்பு: சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம் - ஜெ. அறிவிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaசென்னை: சென்னையில், தனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பொது கழிப்பிடங்கள் தற்போது திமுகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா இன்று (ஜூன் 15)  வெளியிட்டுள்ள அறிக்கை:
வட சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு உட்பட்ட 10வது வட்டத்தின் நடைபாதைவாசிகளுக்காக எனது ஆட்சிக் காலத்தில் 1,511 மனைகள் உருவாக்கப்பட்டதோடு, இவர்களுக்காக 96 பொது கழிப்பிடங்களும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டித்தரப்பட்டன.

ஆனால், மேற்படி குடியிருப்புதாரர்கள் தங்கள் மனைகளுக்கு உள்ளேயே கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொண்டதால் பொதுக் கழிப்பிடம் பயனற்றுப் போனது. எனவே, இந்த பொதுக் கழிப்பிடத்தை அகற்றிவிட்டு மனைகளாக மாற்ற எனது ஆட்சிக் காலத்திலேயே நடவடிக்கை  எடுக்கப்பட்டது.

2006ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து, 96 பொதுக் கழிப்பிடங்கள் அமைந்திருந்த குடிசை மாற்று வாரிய இடத்தை திமுகவினர் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்து வருகிறார்கள். இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மைனாரிட்டி திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்ட நிலம் தேவைப்பட்டதால், அங்கு குடியிருந்தவர்களுக்கு வேறு குடியிருப்புகள் ஒதுக்கும் பொருட்டு, பாரதி நகர் பகுதி-2ல் 108 வீடுகள் எனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன. 2006ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மேற்படி குடியிருப்புகளை உரியவர்களுக்கு ஒதுக்காமல், திமுகவினருக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகின்றது. திமுக அரசின் இது போன்ற முறையற்ற செயல் காரணமாக கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகர், பாரதி நகர் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தாமல், ஆக்கிரமிப்பு, முறைகேடு ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருக்கும் மைனாரிட்டி திமுக அரசைக் கண்டித்தும், பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கழிப்பிடங்கள் திமுகவினரால் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாரதி நகர் பகுதி-2ல் கட்டப்பட்ட 108 குடியிருப்புகளை உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், நாளை (ஜூன் 16) காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

28 March 2012, 11.45 தலைப்புச் செய்திகள்
ஜெயலலிதாவுக்கு கனவில் கூட துரோகம் நினைத்ததில்லை : சசிகலா
சென்னை: ஜெயலலிதாவுக்கு தான் கனவில் கூட துரோகம் நினைத்ததில்லை என...மேலும்...
0 Comments , 81 Hits
29 February 2012, 19.33 செய்திகள்
கூடங்குளம் குறித்த தனது நிலையை தமிழக அரசு தெளிவுப் படுத்த வேண்டும் : கருணாநிதி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக நடந்து வரும்...மேலும்...
0 Comments , 58 Hits
27 January 2012, 18.29 செய்திகள்
ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக...மேலும்...
0 Comments , 246 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits