புதுதில்லி: இந்திய அரசியல்வாதிகள் குறித்த சோனியா காந்தியின் கருத்தை வழிமொழிந்துள்ளார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி.
அரசியலில் இருந்து நல்லவர்கள் ஓய்வு பெறக் கூடாது. இன்றைய அரசியலில் நல்லவர்களை பார்ப்பது அரிது ஆகி விட்டது.
பதவி வந்தவுடன் அரசியல்வாதிகள் அராஜகம் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர் என காங். தலைவர் சோனியா காந்தி நேற்று (பிப்.10) கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுதில்லியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவர் அத்வானி, “அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு இருக்கும் அபிப்ராயத்தை மாற்ற வேண்டும். அரசியலில் இருந்தாலே ஒருவர் ஊழல்வாதியாகதான் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.” எனக் கூறியுள்ளார்.
சோனியாவின் கருத்தை எதிர்கட்சித் தலைவர் அத்வானி வழிமொழிந்துள்ளார். இனி அரசியல்வாதிகள் திருந்துவார்களா?
Want to write for Maniyosai?
Download our android app



