புதுதில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய விமானப்படை, கவுரவ அடிப்படையில் குருப் கேப்டன் பதவியை வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 20 ஆண்டு காலமாக அவர் ஆற்றியுள்ள பணியை கவுரவிக்கும் வகையில் குருப் கேப்டன் பதவி வழங்கப் பட்டுள்ளது.
மேலும் இந்திய விமானப் படையின் விளம்பர தூதராகவும் சச்சின் இருப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் இத்தகைய கவுரவத்தை பெறப்போகும் முதன்முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என்பது விளையாட்டுத்துறைக்கே பெருமை சேர்க்க கூடிய விஷயமாகும். மேலும் விமானத் துறை பின்னணி ஏதும் இல்லாதாவர் சச்சின் டெண்டுல்கர் என்பது சிறப்புச் செய்தியாகும்.
Want to write for Maniyosai?
Download our android app





