புதுடெல்லி: ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்துள்ளது. பி பிரிவில் 12-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
இது உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். 1982ம் ஆண்டு நியூசிலாந்தை 12-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வென்றதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்த தொடரில் இதுவரை ஆடிய 3 ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்கா தோல்வியையேத் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app



