சென்னை: பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை ஏற்றத்தைக் கண்டித்து நாடு தழுவிய கையெழுத்து வேட்டை நடத்தி குடியரசு தலைவரிடம் வழங்கவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியதாவது:
”எரிவாயு விலையை ஏற்றி ஐமுகூ அரசு மக்களுக்கு துரோகம் செய்து விட்டது.
ஜூலை இறுதியில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாள் முதலே இந்த பிரச்சினையை பாஜக கையில் எடுத்து எதிர்ப்பு தெரிவிக்கும். அது வரை, பல் வேறு விதமான போராட்டங்களை பாஜக நடத்தும்.
நாடு தழுவிய கையெழுத்து வேட்டை நடத்தி பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவரிடம் வழங்கவும் பாஜக முடிவு செய்துள்ளது.”
இவ்வாறு பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app





