புதுதில்லி: ஏழை மக்கள் மீது இல்லாத அக்கறை எண்ணெய் நிறுவனங்கல் மீது இருப்பது ஏன் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
எரிவாயு பொருட்களின் விலையை மத்திய அரசு அண்மையில் ஏற்றியது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயலை கண்டித்து ஜூலை 5ம் தேதி எதிர்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பாரத் பந்த் குறித்து செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் நேற்று (ஜூலை 2) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“மன்மோகன் சிங் ஒரு மிகப் பெரிய பொருளாதார மேதையாக இருந்தும் அவரால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. உற்பத்தி அதிகரித்து இருப்பதாகவும், விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் மத்திய அரசு கூறிக் கொள்கிறது. அப்படி இருந்தும் உணவு பொருட்களின் விலை ஏன் தாறுமாறாக அதிகரித்து வருகிறது என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.விலைவாசி உயர்வைப் பற்றி சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எதையும் பேசாமல் மெளனம் சாதிப்பது ஏன்?
ஐமுகூ அரசில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நாட்டில் எவ்வளவு ஏழைகள் இருக்கின்றனர் என்பதற்கான புள்ளிவிவரமே மத்திய அரசிடம் இல்லை. இயற்கை எரிவாயுவை மத்திய அரசு பிரபலப் படுத்த வேண்டும். இதை ஏன் மத்திய அரசு செய்ய மாட்டேன் என்கிறது?
உணவு தானியங்களை சேமிக்க சரியான கிடங்கு வசதி இல்லாததால் 1800 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகியுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப் பட்டிருப்பதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டமே காரணம் என பிரதமர் சொல்கிறார். எண்ணெய் நிறுவனங்களின் நலன் முக்கியமா, ஏழைகளின் நலன் முக்கியமா என மன்மோகன் சிங் விளக்க வேண்டும்.”
இவ்வாறு நிதின் கத்காரி கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





