பெங்களூரு: மரபணு மாற்றம் செய்த கத்திரிக்காய்களை வர்த்தக ரீதியில் பயிர் செய்ய கர்நாடகாவில் தடை விதிக்கப் படும் என மாநில தாவரவியல் துறை அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து உமேஷ் கட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“கர்நாடக மாநிலத்தில் பிடி கத்திரிக்காய் தடை விதிக்கப் படும். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.” என்றார்.
பி.டி. கத்திரிக்காய் பற்றிய இறுதி முடிவை மத்திய அரசு பிப்ரவரி 10ம் தேதி எடுக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
மரபணு மாற்றம் செய்த கத்திரிக்காயை வணிக ரீதியாக பயிரிடுவதற்குள், சுற்றுச் சூழலில் அதனால் ஏற்படும் பாதிப்பு, விவசாயிகளின் கருத்து போன்றவற்றை ஆராய்ந்த பின்பே மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய்க்கு அனுமதியளிக்க வேண்டும் என கர்நாட்டக முதல்வர் எடியூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app



