maniyosai.com

You are here: Home செய்திகள் பிடி கத்திரிக்காயை எதிர்ப்பவர்கள் பைத்தியம்- ஜெய்ராம் ரமேஷ் ஆவேசம்.

பிடி கத்திரிக்காயை எதிர்ப்பவர்கள் பைத்தியம்- ஜெய்ராம் ரமேஷ் ஆவேசம்.

E-mail Print
Share/Save/Bookmark

பெங்களூர்: பி டி கத்திரிக்காய் பற்றியப் பொதுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் தனதுப் பொறுமையை இழந்து ஆவேசமானார். அவர் மான்சேண்டோ கம்பெனியின் ஏஜெண்ட் என்று எழுந்த குற்றச்சாட்டினால் மிகவும் கோபப்பட்ட அவர் போய் மனநல மருத்துவரை சந்திக்க சொல்லி தன்னை எதிர்த்தவர் மீது ஆத்திரப்பட்டார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் குறித்த ஒரு கூட்டம் இன்று (06/02/2010) பெங்களூரில் நடந்தது. இதில்  சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்துக் கொண்டுப் பேசினார்.  அப்பொழுது பி டி கத்திரிக்காயை எதிர்க்கும் ஒருவர் அவரை மான்சேண்டோ கம்பெனியின் ஏஜெண்ட் எனக் குறிப்பிட ஜெய்ராம் ரமேஷ் தனது நிதானத்தை இழந்தார்.

‘நான் ஒன்றும் மான்சேண்டோ கம்பெனியின் ஏஜெண்ட் அல்ல. இப்படி குற்றம்சாட்டும் நீங்கள் ஒரு மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதுப் போல மேலும் குறுக்கிட்டால் இந்தக் கூட்டத்திலிருந்து உங்களை வெளியேற்ற நேரிடும் என்று ஆவேசப்பட்டார். விவசாயிகள், மருத்துவர்கள், அறிவியலாளர்கள் நிறைந்திருந்த அரங்கில் அமைச்சர் தன்னை எதிர்த்தவர்களை நோக்கி, ‘உங்கள் பேச்சை என்னால் கேட்க முடியாது’ என்றுக் கூச்சலிட்டார். மூன்றரை மணி நேரம் நடந்த கருத்தரங்கம் முழுவதும் இதுப்போலவே நடந்து முடிந்தது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 May 2012, 19.04 செய்திகள்
பாஜகவில் இருந்து விலகும் எண்ணம் இல்லை : எடியூரப்பா
பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகும் எண்ணமில்லை என்றும் 70 சட்டமன்ற...மேலும்...
0 Comments , 19 Hits
03 February 2012, 19.14 புகைப்படச் செய்தி
சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக...மேலும்...
1 Comment , 152 Hits
08 February 2012, 18.29 செய்திகள்
சட்டசபையில் ஆபாச படம் பார்த்த விவகாரம் : 3 அமைச்சர்கள் பதவி விலகல்
பெங்களூரு : கர்நாடக சட்டசபையில், செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்த...மேலும்...
0 Comments , 126 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits