maniyosai.com

You are here: Home செய்திகள் வணிக செய்திகள் அந்நிய முதலீட்டால் வேலை வாய்ப்புகள் பெருகும் - அமைச்சர் ஆனந்த் ஷர்மா

அந்நிய முதலீட்டால் வேலை வாய்ப்புகள் பெருகும் - அமைச்சர் ஆனந்த் ஷர்மா

Share/Save/Bookmark

Departmental stores in Indiaபுதுதில்லி: மத்திய அரசு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகளை 100 சதம் அனுமதிக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என மத்திய வணிகம் மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் ஷர்மா கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கும் அரசின் புதிய கொள்கைகள் பற்றி  அடுத்த வாரம் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த ஷர்மா கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

எங்களது முதல்கட்ட எதிர்பார்ப்பின் படி சிறிய மற்றும் நடுத்தர தொழில்களில் முதல் ஆண்டில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும் ஓரிரண்டாண்டுகளில் 5 முதல் 6 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

சில்லறை வர்த்தகத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்டு வரும் 51% முதலீடானது 100 சதமாக உயர்த்தப்படும்.பல மாநில அரசுகள் அரசின் இந்த புதிய திட்டத்தை வரவேற்றுள்ளன. சிறிய மற்றும் மிகச்சிறிய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்ற கருத்து சரியானதல்ல. இந்தோனேசியா போன்ற நாடுகளில் வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் அந்நாட்டின் 90சத வர்த்தகம் அந்நாட்டின் வசமே உள்ளன.

கொள்கை முடிவுகளை எடுப்பதும், உரிய சமயத்தில் அவற்றை அமல்படுத்துவதும் அரசின் அடிப்படை உரிமையாகும். வேளாண் உற்பத்தியாளர்களை இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் துணிச்சலான தாராளமய கொள்கைமுடிவை அரசு எடுத்துள்ளது. இவை அந்நிய முதலீட்டை பெருமளவு உயர்த்துவதோடு, வேலை வாய்ப்புகளையும் பெருக்கும்.

இந்தியா மட்டுமே  இதுவரை 51 சதம் மட்டுமே அந்நிய முதலீட்டை அனுமதித்து வந்துள்ளது. ஆனால் நீனா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, தெற்கு ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, சிலி ஆகிய நாடுகள் முன்னதாகவே 100 சதம் அந்நிய முதலீடுகளை அனுமதித்துவிட்டது. அதனால் நாம் மற்ற நாடுகளை பின்பர்றுகிறோம் என்று பொருளல்ல, நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அதையே செய்கிறோம்.

பல்வேறு நிறுவனங்களின் அந்நிய முதலீடுகளுக்கான விண்ணப்பங்களை 'அந்நிய முதலீடு வளர்ச்சி வாரியம்" (Foreign Investment Promotion Board - FIPB) ஆய்வு செய்து சம்மந்த்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து உரிமங்களை பெற்றுத்தரும். அரசின் இந்த முடிவு பன்னாட்டு சில்லறை வர்த்தக பெரு நிறுவனங்களான Wal-Mart, Tesco மற்றும் carrefour    ஆகியவை பெரிய பெரிய வணிக சங்கிலிகளை உருவாக்க வழிவகை செய்யும்"

வேளாண் உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் உரிமை அரசிடமே தக்கவைத்துக்கொள்ளப்படும். இது சில்லறை மற்றும் விளிம்புநிலை வணிகர்களை ஒருபோதும் பாதிக்காது."

இவ்வாறு மத்திய வணிக மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%