maniyosai.com

You are here: Home செய்திகள் வணிக செய்திகள் உலக சுற்றுலா சந்தையில் இந்தியாவுக்கு இரண்டு விருதுகள்

உலக சுற்றுலா சந்தையில் இந்தியாவுக்கு இரண்டு விருதுகள்

Share/Save/Bookmark

Incredible Indiaலண்டன்:  இந்தியா "உலகின் முன்னணி சுற்றுலா இலக்கு" மற்றும் " உலகின் முன்னணி சுற்றுலா பலகை" ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றதன் மூலம் இந்தியா உல்க சுற்றுலா சந்தை- 2011 -இல் (World Tourism Mart) அனைத்து நாடுகளின் கவனைத்தையும் கவந்தது இந்தியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் உலக அளவிலான சுற்றுலா விருதுகளை அதன் அமைப்பாளரான (World Travel Awards) லண்டனிலுள்ள எக்ஸல் எக்ஸிபிஷன் மையத்தில் க்ரஹாம் ஈ. கூக்கிடமிருந்து  பெற்றார். அப்போது அவர் இந்தியா இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மேலும் கூடுதலாக 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவுள்ளதாக தெரிவித்தார்.

ஒரு சுற்றுலாப் பயணி ஒரு பயணத்தின் போது இரண்டு மாத காலத்தில் மீண்டும் இந்தியாவிற்குள் செல்ல விஸா தடை உள்ளதைப்பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு சஹாய், " அந்தத் தடை விரைவிலேயே அகற்றப்படும்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "கூடுதலாக  ஐந்து லட்சம் பயணிகளைக் கவர்வதென்றால், அதற்கேற்ப அடிப்படை ஆதார வசதிகளை தனியார்துறையிராலும், பொதுதுறையினராலும் விரிவு படுத்தவுள்ளோம். எங்களுக்கு இரண்டு லட்சம் விடுதி அறைகள் தேவைப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.

"நாட்டு மக்களிடம் நிலவி வரும் வறுமையை ஒழிப்பதற்கு நாங்கள் சுற்றுலாத்துறையை ஒரு முக்கியக் கருவியாகக் கருதுகிறோம்.ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் இந்தியாவிலுள்ள மிக மிக ஏழையான மக்களுக்கு உதவுகிறார்" என்று அவர் மேலும் கூறினார்.

"சொல்லப்போனால் நாங்கள் சற்று தாமதமாக துவங்கியுள்ளோம். ஆனால் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறோம், சுற்றுலாத் துறையை வெற்றியடையச் செய்வ்தில் உறுதியாக இருக்கிறோம்" என்று சுபோத் காந்த் சஹாய் குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும்  இந்த ஆண்டு 1,60,000 பயணிகள் வந்து போயுள்ளதாகக் கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மாநில சுற்றுலா அமைச்சர் நவாங்க் ரிக்ஸின் ஜோரா கூறுகையில், " மக்களுடைய கண்ணோட்டம் எங்களை மிகவும் பாதிக்கிறது. ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் நிகழும் சிறு சிறு கல் வீச்சு சம்பவங்கள் கூட பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னை போல பெரிதுபடுத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.

இந்த சுற்றுலா விருது வழங்கும் விழாவில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் யூ.கே.ராஜேஷ் பிரசாத்தும், பல்வேறு மாநில சுற்றுலா அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%