கொல்கத்தா: மாருதி சுஸுகி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அல்டோ/அல்டோ கே.10 வகைக் கார்களுக்கான சோதனை ஓட்டத்தில் கொல்கத்தாவில் திலிப்தாஸ் என்பவர் ஓட்டிச்சென்ற அல்டோ சார் மிக அதிக மைலேஜ் ஆன ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 49.3 கிமீ என்னும் அதிக பட்ச மைலேஜ் கொடுத்து சாதனை புரிந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்காக மாருதி சுஸுகி நிறுவனம் ஒரே நேரத்தில் புதுதில்லி, கொல்கத்தா,ஹைதராபாத் மற்றும் ஜெய்பூர் நகரங்களில் மாருதி அல்டோ எக்ஸ்ப்ளோர் மேக்ஸ் கார்களின் மைலேஜ் போட்டியினை நடத்தியது. நான்கு நகரங்களிலும் மொத்தமாக 312 அல்டோ கார்கள் பங்கேற்றன.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (மார்கெட்டிங்) ஸஷான்க் ஸ்ரீவத்சவா இது பற்றிக் கூறுகையில், " இத்தகைய மைலேஜ் சோதனை ஓட்டங்கள் வாடிக்கையாளர்கள் எவ்வாறு அதிக மைலேஜ் பெறுவது என்பதை அறிந்துகொள்ளமட்டும் அல்லாமல், மாருதி கார்கள் ஒன்றைப்போல் ஒன்று எவ்வாறு ஸ்திரமான மைலேஜை கொடுக்கின்றன என்பதை அறியவும் பயனுள்ளதாக அமைகின்றன" என்று குறிப்பிட்டார்.
ஹைதாராபாத்தை சேர்ந்த மெஹுதி ஹுசேன் என்பவர் இரண்டாவது சாதனையாளராக 48.2 கிமீ மைலேஜ் பெற்றுள்ளார். மூன்றாவதாக ஹைதராபாத்திலேயே பி.சாய் சுமந்த் என்பவர் 47.6 கிமீ சாதனை படைத்துள்ளார்.
இந்த பந்தய ஓட்டங்களின் போது மாருதி நிறுவனம், பந்தயத்தில் பங்கு கொண்டவர்களுக்கு கால அட்டவணையையும், ரூட் வரைபடத்தையும், மைலேஜ் பற்றிய சிறு புத்தகத்தையும் வழங்கி ஒரே குறிப்பிட்ட இடத்தை நோக்கி கார்களை ஓட்டச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்காலத்தில் விலை உயர்வான இரட்டை சக்கர வண்டி வாங்க நினைப்பவர்கள் கூட சற்று நிதானித்து மாருதி அல்டோ கார் வாங்கிவிடலாம். 49 கிமீ மைலேஜ் என்றால் இலேசுபட்ட விஷயமா!
Want to write for Maniyosai?
Download our android app