மும்பை: டாடா நிறுவனத்தின் "நானோ" குட்டிக்காரை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனம் தனது புதிய "நானோ" காரை அறிமுகம் செய்யவுள்ளது.
டாடா நிறுவனம் தற்போது இந்தியாவில் “நானோ” என்ற குட்டி காரை அறிமுகப்படுத்தி உள்ளது. 624 சி.சி. திறன் கொண்ட அந்த காரின் விலை ரூ.1 லட்சத்து 53 ஆயிரம். இந்த நிலையில், மாருதி சுசுகி நிறுவனமும் “நானோ” கார் தயாரித்து இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த கார் 660 சி.சி. திறன் கொண்ட பெட்ரோல் என்ஜினை கொண்டது.
மாருதி சுசுகி நிறுவனம் 800 சி.சி. திறன் கொண்ட சிறிய என்ஜினால் ஆன 2 ரக கார்களை ஜப்பானில் அறிமுகப்படுத்தி அவற்றை இயக்கி வருகிறது. “பேலட்”, “எம்.ஆர். வேகன்” என்ற பெயரிலான அந்த கார்கள் தில்லியில் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள கார் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
அப்போது, மக்களிடம் பெறும் வரவேற்பை தொடர்ந்து அவற்றில் ஒன்றோ அல்லது இரண்டுமோ அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்படும். இங்கு அவை 660 சி.சி. திறன் கொண்ட என்ஜின்களாக தயாரிக்கப்படும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள மாருதி ஆல்டோ கார் 800 சி.சி. திறன் கொண்ட என்ஜினை கொண்டது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மாருதி நானோ கார் விலை ரூ.2 லட்சத்து 96 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
:woohoo: