maniyosai.com

You are here: Home செய்திகள் வணிக செய்திகள் ரிசர்வு வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை குறைத்துள்ளது

ரிசர்வு வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை குறைத்துள்ளது

Share/Save/Bookmark

RBI Governor D.Subba Raoமும்பை: இந்திய ரிசர்வு வங்கியானது இதர வங்கிகள் அதனிடம் வைத்துள்ள ரொக்க இருப்பு விகிதத்தை (CASH RESERVE RATIO) குறைத்துள்ளது. வங்கிகள் ரிசர்வு வங்கியிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை ரொக்க இருப்பாக வைத்திருக்க வேண்டும். இது ரொக்க இருப்பு விகிதம் (CASH RESERVE RATIO) என்று அழைக்கப்படுகிறது. ரிசர்வு வங்கியானது இதனை அதிகரிக்கும்போது வங்கிகளிடம் புழங்கிவரும் ரொக்கமானது குறையும் சி.ஆர்.ஆர் குறைக்கப்பட்டால் வங்கிகளிடம் புழக்கத்தில் உள்ள ரொக்கத் தொகை அதிகரிக்கும். இதன் மூலம் ரிசர்வு வங்கியானது நாட்டின் கடன் வளர்ச்சியை கட்டுப்படுத்தமுடியும். அதன் விளைவாக பொருள் உற்பத்தி, விலைவாசி போன்றவற்றையும் கட்டுப்படுத்தமுடியும்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி, அதனிடம் வங்கிகள் வைத்துள்ள ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வங்கிகளிடம் 32 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும்.

ரிசர்வ் வங்கியின் மூன்றாவது காலாண்டு நிதிக் கொள்கை ஆய்வு அறிக்கையை, இவ்வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ் வெளியிட்டார்.
அந்த அறிக்கையின் சாராம்சம்;
வங்கிகள் திரட்டும் மொத்த டெபாசிட்டுகளிலிருந்து, குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும், ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.), 6 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது, வரும் 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
ரெப்போ ரேட்
இதனால், வங்கிகள் வசம் 32 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும். மேலும், இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிச் சந்தையில் கூடுதலாக 1.60 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%